News November 19, 2025
ஈரோடு: மதுபாட்டில்கள் பறிமுதல்

கடத்தூர் அடுத்த இண்டியம்பாளையத்தில் குள்ளம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகில் உள்ள காலி இடத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. இதையடுத்து கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்று பார்த்த பொழுது ஞானசேகரன் என்பவர் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கைது செய்து 111 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
Similar News
News November 21, 2025
அந்தியூர் அருகே திருநங்கை தற்கொலை

அந்தியூர் அருகே கழுதைப்பாலி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை ரபியா (27) கடந்த சில மாதங்களாக ஒருவருடன் கைப்பேசியில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென அறைக்குள் சென்று ரபியா சேலையால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டாலும், மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டது. அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.