News March 19, 2024
ஈரோடு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
கீழ் பவானி: பெட்ரோல் பங்க் ஊழியர் நீரில் மூழ்கி மாயம்

கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் பூபதி வயது 18 பெட்ரோல் பங்க் ஊழியர் ஆன இவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் பவானிசாகர் பூங்காவுக்கு வந்துள்ளனர் பின்னர் தொப்பம்பாளையம் அருகே உள்ள கீழ் பவானி வாய்க்காலில் நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார் அப்போது பூபதி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மாயமானார். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
News November 2, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (02.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
News November 2, 2025
ஈரோடு: வீட்டு வரி, குடிநீர் வரி கட்டியாச்சா?

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!


