News January 1, 2025
ஈரோடு மக்களுக்கு ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா?

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் 08.11.2025 அன்று அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. அன்று, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு பதிவு செய்ய மனு அளித்து பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)
News November 6, 2025
ஈரோட்டில் முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சிஇஓ) சுப்பாராவ் பணியாற்றி வந்தார். இவர், சென்னை தொடக்க கல்வி இயக்கத்தின் துணை இயக்குநராக (நிர்வாகம்) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்னார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக (டிஇஓ) பணியாற்றி வந்த இமான்விழி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News November 6, 2025
புளியம்பட்டி அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

ஈரோட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் நேற்று மாலை கேரளாவில் வாழைக்காய் லோடு இறக்கிவிட்டு மினி லாரியில் புளியம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அன்னூர்-சத்தி சாலை அருகே சத்தியிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், மினி லாரியும் திடீரென்று மோதிக்கொண்டன. இதில், லாரி டிரைவர் சதீஸ்குமார் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலே இறந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்


