News August 23, 2024
ஈரோடு பிரியாணி கடையில் தீ

ஈரோடு அகில்மேடு மெயின் வீதியில் பிரியாணி கடை உள்ளது. இங்கு நேற்று (ஆகஸ்ட் 22) காலை 10.20 மணியளவில் வர்த்தக காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் இருந்து கழற்றி வேறு சிலிண்டருக்கு மாற்றியபோது, ரெகுலேட்டரில் இருந்த பின் சிலிண்டரில் சிக்கியது. இதனால் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
Similar News
News December 26, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு…

போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். போதைப்பொருட்கள் உங்கள் எதிர்காலத்தைத்
தீர்மானிக்க விடாதீர்கள்.
ஒரு தவறான தேர்வு, வாழ்நாள் கனவுகளை அழித்துவிடும்.
போதைப்பொருட்களுக்கு ‘இல்லை’ என்றும்,
நல்வாழ்க்கைக்கு ‘ஆம்’ என்றும் சொல்லுங்கள். போதை பொருட்கள் புகார் அளிக்க 100 ஐ டயல் செய்யவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்
News December 25, 2025
ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
கோபி: தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியை சார்ந்த பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகிய 25 க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட இணை செயலாளர் பிரபு, பொருளாளர் வினோஜ், மேற்கு நகர செயலாளர் சிந்து உட்பட பலர் இருந்தனர்.


