News November 16, 2024
ஈரோடு: நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
அந்தியூர் தாலுகா, எலச்சிபாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன், இவரது மனைவி சின்னமாதி (20). இவரை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரும்போது பிரசவ வலி அதிகமானதால், எருமை குட்டை என்ற வனப்பகுதியில் (பர்கூர் அருகில்) இன்று அதிகாலை 2 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
Similar News
News November 19, 2024
ஈரோடு கலெக்டரிடம் நேரில் சந்தித்து எம்எல்ஏ மனு
பெருந்துறையில் அமைந்துள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில் புதிதாக அமைய உள்ள தீவிர சிகிச்சை பிரிவு கட்டட பணியை விரைந்து முடிக்குமாறு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். சந்திப்பின்போது மாவட்ட பொருளாளர் மணி பங்கேற்றார்.
News November 19, 2024
ஈரோட்டில் 40 பேர் மீது குண்டாஸ்
ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதுவரை சாராயம் காய்ச்சி விற்றதாக 5 பேர், கஞ்சாவிற்ற 9 பேர், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட 10 பேர், தொடர் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேர், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக 9 பேர் என கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜவகர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
ஈரோட்டில் 8500 பேர் புதிதாக விண்ணப்பம்
ஈரோடு மாவட்டத்தில் நவ.16, 17 ஆகிய இரண்டு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது, இதில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க 8,541 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2,221 வாக்குச்சாவடி முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 17,423 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.