News March 21, 2024

ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

Similar News

News November 3, 2025

சென்னிமலை அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

image

சென்னிமலை  அருகே ஒட்டவலசு , முத்தம்மாள்,60;,  சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அவரது வீட்டை ஒட்டியவாறு மண் சுவர்களுடன்  கூடிய ஆட்டு கொட்டகை உள்ளது. இன்று மதியம் முத்தம்மாளின் பக்கத்து வீடு  மாயம்மாள் ,முத்தம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்த போது முத்தம்மாள் ஆட்டு கொட்டகை  சுவர் இடிந்து விழுந்து இறந்து போனநிலையில் கிடந்ததை  பார்த்துள்ளார். புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை .

News November 3, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, பகுதி நேர வேலைவாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

News November 3, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வெளிப்படை தன்மையோடு வழங்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். குறிப்பாக புதிய ரேஷன் கார்டு மகளிர் உரிமை திட்டம் ஜாதி சான்றிதழ் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!