News January 7, 2025
ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடாது போன்ற உத்தரவுகள் தேர்தல் ஆணையம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள், தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் ஆயத்தமாகியுள்ளனர்.
Similar News
News February 13, 2026
ஈரோட்டில் மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிப்பு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 16-ஆம் தேதி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பலர் மகா சிவராத்திரி விழாவிற்குச் செல்வதால், அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
News February 13, 2026
சத்தி அருகே அரங்கேறிய துணிகர சம்பவம்!

சத்தி வட்டம் புளியம்பட்டியில் அடுத்த தாசம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. பூசாரி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் பூட்டை உடைத்து கோவில் கருவறையில் இருந்த, மாகாளியம்மன் சாமி சிலையின் கழுத்தில் இருந்து சுமார் 1/2 பவுன் தங்க மாங்கல்யத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் (12.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


