News August 6, 2025
ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஆக.,19-ம் தேதி காலை 8:10 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் மட்டும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 6, 2025
முசிறியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டம், முசிறியில் டாக்டர் ஜி.விஸ்வநாதன் பிள்ளை கல்வி அறக்கட்டளை மற்றும் முசிறி லயன்ஸ் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜிவி ஐடிஐ என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில் பாலிடெக்னிக், ஐடிஐ படித்த மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 6, 2025
திருச்சி: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <
News August 6, 2025
திருச்சி: பொதுத்தேர்வு அசல் சான்றிதழ் நாளை விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.07) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.