News March 27, 2024
ஈரோடு : திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.4.89 கோடி

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில், வேட்பாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் பெயரில் மொத்தம் ரூ.4.89 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பிரகாஷ் பெயரில் ரூ.3,96,849 மற்றும் மனைவி பெயரில் ரூ.35,56,310 கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
ஈரோட்டில் மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிப்பு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 16-ஆம் தேதி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பலர் மகா சிவராத்திரி விழாவிற்குச் செல்வதால், அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
News February 13, 2026
சத்தி அருகே அரங்கேறிய துணிகர சம்பவம்!

சத்தி வட்டம் புளியம்பட்டியில் அடுத்த தாசம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. பூசாரி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் பூட்டை உடைத்து கோவில் கருவறையில் இருந்த, மாகாளியம்மன் சாமி சிலையின் கழுத்தில் இருந்து சுமார் 1/2 பவுன் தங்க மாங்கல்யத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் (12.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


