News October 31, 2025
ஈரோடு: தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன்!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், வேம்மாண்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனபாக்கியம் (55). இவரது இரண்டாவது மகன் சந்தோஷ்ராஜா (40) மதுபோதையில் வந்து தாயுடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆவேசமடைந்த சந்தோஷ் ராஜா, தாய் தனபாக்கியத்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காசிபாளையம், சூரம்பட்டிவலசு, தத்துக்காடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் 2,3, மலைக்கோவில், சாஸ்திரி நகர், காந்திஜி சாலை, அணைக்கட்டு ரோடு, சங்கு நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பாரதிபுரம், கோவலன் வீதி, நேதாஜி வீதி, மோகன் குமாரமங்கலம் வீதி, காமராஜ் சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News October 31, 2025
ஈரோடு: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 31, 2025
ஈரோடு: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தையல் பயிற்சி முடித்ததற்காக சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர் போன்ற உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


