News March 29, 2025
ஈரோடு தலைமை தபால் நிலையம் 3 நாள் விடுப்பு

ஈரோடு தலைமை அஞ்சலகங்களில்பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறுசேமிப்பு திட்டம் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2024-25 வங்கி சேவை மற்றும் ஐபிபிபீஸ்வைப் சேவைகளும்மேற்கண்ட 2 நாட்களில்இயங்காது. மேலும், நிதியாண்டின் இறுதி நாளான 31ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் அதையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை என ஈரோடு முதுநிலை கோட்ட ஆய்வாளர் கோபாலன் தெரிவித்தார்.
Similar News
News February 2, 2026
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!!!

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பிப். 09 முதல் பிப்.24 ஆம் தேதி வரை Jute Bags, Files, Ladies Bags, Wallets தயாரித்தல் பயிற்சி நடைபெறுகிறது.பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 8778323213,0424-2400338 SHAREIT
News February 2, 2026
அம்மாபேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்: அதிரடி கைது!

அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூனாச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 41 அவர் கர்நாடக மாநில மது பாட்டில்கள் குட்கா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
ஈரோட்டில் பெரும் முறைகேடா?

ஈரோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் லுங்கி குடோன் உள்ளது. அங்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அங்கு வந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, இதனால் மக்கள், ஊடகத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


