News January 26, 2026
ஈரோடு: செங்கோட்டையன் வாழ்த்து பதிவு

ஈரோடு கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் மேற்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளருமான செங்கோட்டையன், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
ஈரோடு: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 9, 2026
ஈரோடு அருகே மாணவி தலை நசுங்கி பலி!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கங்காபுரத்தில், திண்டலைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா (23) இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பின்னால் வந்த ஈச்சர் வேன் ஏறியது. இதில் தலை நசுங்கி தீபிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 9, 2026
ஈரோடு ஆட்சியர் அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 12/02/2026 அன்று மாலை 3 மணிக்கு, முன்னாள் படைவீரர்கள் [ம] சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர் தங்களது கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.


