News August 25, 2024

ஈரோடு: சாதியை சொல்லி அடித்த இருவர் கைது

image

கோபி அடுத்த
கலிங்கியம் ஊராட்சி தூய்மை காவலராக இருப்பவர் ராமச்சந்திரன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தங்கராஜ் ஆகியோர் செல்போன் வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுத்து சாதியை சொல்லி திட்டி அடித்துள்ளனர். புகாரின்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்தார்.

Similar News

News February 25, 2026

ஈரோடு: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமானச் சான்றிதழ் அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது கோவை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

ஈரோடு: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

image

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.

வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 25, 2026

ஈரோடு : பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!