News January 17, 2026
ஈரோடு: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News January 27, 2026
ஈரோட்டில் 50 பேர் அதிரடி கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் நேற்று போலீசார் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேர் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்.
News January 27, 2026
பெருந்துறை அருகே சோகம்: குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை புத்தூர் புதுபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநிலப் பெண் ஒருவர், இவருக்கு விடுதி குளியலறையிலேயே ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.


