News January 9, 2026
ஈரோடு: குழந்தை திடீர் பலி

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு அருள்மொழி (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, திங்களூர், குள்ளம்பாளையம், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், மேட்டூர், சுப்பையன்பாளையம், தண்டாகவுண்டன்பாளையம், சீனாபுரம் மேற்கு மட்டும், பொன்முடி, செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 4, 2026
ஈரோடு: தொகுதியை கூட்டணிக்கு கொடுத்தால் தோல்வி தான்- EX MLA

ஈரோடு கிழக்கு தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. இந்நிலையில் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான தமாகவில் யுவராஜ் முனைவதாகவும், திமுக சார்பில் மீண்டும் சந்திரகுமார் (அ) கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் குடும்பத்தில் ஒருவர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் “தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால் நிச்சயம் தோல்விதான்” என அதிமுக EX MLA தென்னரசு கூறியது பேசு பொருளாக உள்ளது.
News February 4, 2026
ஈரோடு: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <


