News January 11, 2025
ஈரோடு கிழக்கில் விஜயகாந்த் மகன் போட்டி?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாராம்.
Similar News
News August 14, 2025
ஈரோடு அருகே புதுப்பெண் தற்கொலை

ஈரோடு: கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதிக்கும் (37) அவரது மனைவி வினோதினிக்கும் (34) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(ஆக.13) வினோதினி தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 14, 2025
ஈரோட்டில் வங்கி வேலை வேண்டுமா? CLICK NOW

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 14, 2025
ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!