News April 25, 2025

ஈரோடு: கல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்

image

ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நட்டாற்றீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News July 8, 2025

ஈரோட்டில் மக்களுடன் ஸ்டாலின் முகாம் தொடக்கம்

image

சட்டபேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பின்படி, அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் வரும் 15.7.25 அன்று வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைக்கிறார். ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து வட்டங்களிலும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

News July 8, 2025

சொர்ண லட்சுமி நரசிம்மர் கோயில்!

image

ஈரோடு, கோனார்பாளையத்தில் புகழ்பெற்ற சொர்ண லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

News July 8, 2025

ஈரோடு: விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை

image

ஈரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கான வயது வரம்பு 2025ம் ஆண்டு 30-4-2025 படி 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி வரை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து 30ம் தேதி மாலை 5 மணிக்குள் ஈரோடு மாவட்ட இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!