News December 4, 2024
ஈரோடு கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

கோவை, திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள் தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தி, காட்சிப்படுத்தி பரிசுகளை அள்ளலாம். இதில் முதல் 7 கலைஞர்களுக்கு ரூ.5000, 2ஆம் பரிசு ரூ.3,000, 3ஆம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். இதற்கு தங்களது படைப்புகளை டிச.10ஆம் தேதிக்குள் மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகத்திற்கு அனுப்பவும். மேலும், விவரங்களுக்கு 94422-13864 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News October 26, 2025
சென்னிமலையில் நாளை இதற்கு அனுமதி இல்லை

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை, நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதனால் 2 நாட்களும் சென்னிமலை நகர் மற்றும் மலை கோவில் பாதைகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மலைப்பாதை வழியாக நான்கு சக்கர வாகனங்கள், கார் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் திருக்கோவில் பஸ் மூலம் கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 26, 2025
ஈரோடு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

ஈரோட்டில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News October 26, 2025
ஈரோடு: உங்களுக்கு குழந்தை இருக்கா?

குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு நோய் வராமல் தடுப்பதற்காக ஆண்டுக்கு 2 முறை வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி முதல் நவ.1-ம் தேதி வரை 2,080 அங்கன்வாடி மையங்களிலும், 376 துணை சுகாதார நிலையங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க)


