News February 21, 2026
ஈரோடு: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000! சூப்பர் திட்டம்

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 21, 2026
ஈரோடு: வாக்காளர்கள் கவனத்திற்கு! முக்கிய தகவல்

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க
News February 21, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் மினி டிராக்டர் உடன் பயன்படுத்தும் மஞ்சள் தோண்டும் இயந்திரம் மணிக்கு ரூ.460 விதம் வாடகைக்கு விடப்படுகிறது ஈரோடு உபகோட்டம் மற்றும் கோபியில் தலா 3 இயந்திரங்கள் உள்ளது. இவற்றை இ -வாடகை ஆன்லைன் செயலியில் முன்பதிவு செய்யலாம். ஈரோடு:0424-2904843, 98941-83367, கோபி:04285-290069, 9443547484 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். SHAREIT
News February 21, 2026
ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகம் 22-2-26 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக திண்டல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார். இதன்படி பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு வரவேண்டிய வாகனங்கள் மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி நால்ரோடு வழியாகவும், கரூர், நாமக்கல், திருச்சிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ரிங்ரோடு, பரிசல் துறை வழியாகவும் செல்ல வேண்டும்.


