News October 27, 2025
ஈரோடு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 (அ) 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். (தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News October 27, 2025
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட நிலவரம்;
இன்று அக்டோபர்-27 மதியம் 12 மணி நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.82 (33.46) அடியாகவும், பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 (105) அடியாகவும் உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாகவும்,
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.75 ஆகிய இரண்டு அணைகள் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.
News October 27, 2025
வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. தொடக்கத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுக்கலாம். பின்னர் தங்களது பகுதி வேளாண் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசலாம். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
ஈரோடு: B.E/ B.Tech/ B.Sc போதும்! ரூ.1,40,000 வரை சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)


