News December 1, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
ஈரோடு மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஈரோடு மாநகரத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சோலார் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 74.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புறநகர் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திருச்சி கரூர் மதுரை வெள்ளகோவில் பகுதிகளுக்கு சோலார் நிலையத்திலிருந்து டிச.04 நாளை காலை 11 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
News December 3, 2025
உலக பவர் லிப்டிங் போட்டி தங்கம் வென்ற ஈரோடு வீரர்

ஈரோடு: தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற உலக அளவிலான ‘பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 267 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம்பெற்ற 30 பேரில் 19 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், ஈரோடு சூரம்பட்டிவலசைச் சேர்ந்த திவாகர் 56 கிலோ பிரிவு டெட் பவர் லிப்டிங்கில் மூன்றாவது முயற்சியில் 185 கிலோ தூக்கி முதலிடம் பெற்றார்.
News December 2, 2025
ஈரோடு காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


