News February 2, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: ஸ்டாலின் கடிதம்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் திமுக, நாதக என இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில், இக்கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு வெற்றியை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 2) தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News March 2, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 2, 2026

ஈரோட்டில் இவர் போட்டியா?

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட சென்னை திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு இன்று வழங்கினார். இந்நிகழ்வில் உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 2, 2026

ஈரோட்டில் குறைந்த விலையில் வண்டி வேண்டுமா?

image

ஈரோடு மாவட்டத்தில் உரிமையாளர் கோராத 342 இருசக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் மார்ச் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 8 முதல் 10 மணிக்குள் ரூ.2,000 முன்பணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0424-2258100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என எஸ்.பி. சுஜாதா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!