News March 21, 2024
ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
Similar News
News September 8, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.9) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம், கள்ளிபாளையம், டாணாபுதூர், ஆலத்தூர், காராப்பாடி, பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம், நல்லூர், செல்லம்பாளையம், தாசம்பாளையம், ஆலம்பாளையம், கணுவக்கரை மற்றும் ஆம்போதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
ஈரோடு மக்களே: நம்ம ஊருக்கு வருது டைடல் பார்க்!

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க டைடல் பூங்கா திட்ட, வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது, இதன்மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஈரோடு மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 8, 2025
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகள் படிக்க வாய்ப்பு

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் , ஈ.சி.ஜி, எலும்பு முறிவு போன்ற துறைகளில் படிப்புகளுக்கு காலியாக இடங்கள் உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.