News February 9, 2026
ஈரோடு அருகே மாணவி தலை நசுங்கி பலி!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கங்காபுரத்தில், திண்டலைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா (23) இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பின்னால் வந்த ஈச்சர் வேன் ஏறியது. இதில் தலை நசுங்கி தீபிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தையலர், ஓட்டுநர், பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். வேலை தேடும் நபர்களுக்கு உதவும் இதை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தின் 10 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16, 2026 மாலை 5:45 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய <
News February 10, 2026
ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


