News November 5, 2025
ஈரோடு அருகே பேருந்தில் இருந்து விழுந்தவர் பலி

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (65). இவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் படியில் நின்று பயணித்துள்ளார். வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது திடீரென நடராஜ் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
தாளவாடி அருகே விபத்து

ஈரோடு, தாளவாடி இருந்து கெட்டவாடிக்கு இன்று காலை 40 மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து தொட்டமுதிகரை அருகே செல்லும் போது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயம் அடைந்தார். பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதாரம் ஆனாது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 5, 2025
ஈரோடு: மக்களுக்கு முக்கிய எண்கள்

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)
News November 5, 2025
ஈரோடு: கடன் பிரச்சனை நீங்கனுமா?

ஈரோடு மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)


