News April 20, 2025
ஈரோடு அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு எலவமலையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரசவத்திற்காக, ஜெயம்கொண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே சேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் சேகரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சேகர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 19, 2025
இந்த மாத இறுதிக்குள் வைக்க வலியுறுதல்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்களில் வரும் 30-ம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் தளலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
News April 19, 2025
நீதியை நிலைநாட்டும் கொங்கலம்மன்!

கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு, மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது. இங்கு கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT!