News April 23, 2025
ஈரோடு: அங்கன்வாடி மையங்களில் வேலை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News October 30, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 29, 2025
ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று முற்பகல் 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட பல்வேறு விபரம் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, காமாட்சி அம்மன் மண்டபம்-மேட்டுபுதூர் (சத்தியமங்கலம் வட்டாரம்), விஜயபுரி அம்மன் திருமண மண்டபம் – விஜயபுரி (பெருந்துறை வட்டாரம்), நஸ்ரத் இல்லம்-கொங்கஹள்ளி ரோடு (தாளவாடி வட்டாரம்), ராஜா கலையரங்கம் – காலிங்கராயன்பாளையம் (மேட்டுநாசுவம்பாளையம்-நகர்ப்புற பஞ்சாயத்து) ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.


