News March 29, 2024
ஈரோடு: 80 கோயில்களில் திருவிழா

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.
Similar News
News February 2, 2026
அம்மாபேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்: அதிரடி கைது!

அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூனாச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 41 அவர் கர்நாடக மாநில மது பாட்டில்கள் குட்கா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
ஈரோட்டில் பெரும் முறைகேடா?

ஈரோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் லுங்கி குடோன் உள்ளது. அங்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அங்கு வந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, இதனால் மக்கள், ஊடகத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
News February 1, 2026
ஈரோடு: வாக்காளர்கள் கவனத்திற்கு

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க


