News April 19, 2024
ஈரோடு: 3 பெண்களின் ஒற்றுமை
ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2024
புதிய தொழிலாளர் உதவி ஆணையர் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையராக பணியாற்றிய (அமலாக்கம்) திருஞானசம்பந்தம், ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையராக (சமரசம்) பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையராக பணியாற்றிய ஜெயலட்சுமி, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையராக (அமலாக்கம்) நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தொழிலாளர் துறையினர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
News November 20, 2024
ஈரோட்டில் விலை உச்சத்துக்கு சென்றது: மேலும் உயரும்
ஈரோட்டில் வரத்து குறைந்துள்ளதால் முருங்கைக்காயின் விலை கிலோ ரூ 120க்கு விற்பனையானது. ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று ஈரோட்டில் முருங்கைக்காயின் விலை கிலோ 120-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் சற்றே கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரி ஒருவர் தெரிவித்தபோது, பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு எனவும், மேலும் காய்கறிகளின் விலை உயரக்கூடும் எனவும் தெரிவித்தார்.
News November 19, 2024
ஈரோடு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP 2/2A முதன்மை தேர்வுக்கான தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் 94990-55943,0424-2275860 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.