News March 29, 2024
ஈரோடு வந்த கமல்ஹாசன்

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைக்காக இன்று ஈரோடு வருகை தந்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
Similar News
News January 21, 2026
கோபியில் வசமாக சிக்கிய நபர்! அதிரடி கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கருப்புசாமி. இவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதாகப் பங்களாபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
ஈரோடு : வாட்ஸ்அப் வழியாக GAS புக்கிங்!

ஈரோடு மக்களே வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 21, 2026
பவானி அருகே சோகம்: பெண் விபரீத முடிவு!

பவானியில் குடும்பத் தகராறு காரணமாக தனலட்சுமி (38) பெண் தூக்கிட்டுத் தற்கொலை. இவருக்கும் இவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


