News March 30, 2026
ஈரான் புதிய முடிவு.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவர USA-வுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக பாக்., அறிவித்துள்ளது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும்; எதிர்காலத்தில் USA, இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. இதனால், வரும் 7-ம் தேதிக்குள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின், இம்முடிவால் இந்தியாவில் எண்ணெய் பிரச்னை தீரும்.
Similar News
News April 4, 2026
1 லிட்டர் பெட்ரோல் ₹2 மட்டுமே.. எங்கு தெரியுமா?

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருளுக்கு திண்டாட்டம் நிலவுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹520-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 1 லிட்டர் ₹101-க்கு விற்பனையாகிறது. ஆனால், லிபியாவில் 1 லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் வெறும் ₹2.18 தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், எண்ணெய் வளம் மிகுந்த லிபியாவில் தான், உலகிலேயே பெட்ரோல் விலைக் குறைவாம்.
News April 4, 2026
கட்சி மாறுகிறாரா அதிமுக வேட்பாளர் ராஜவர்மன்?

திருச்சுழி தொகுதியில் போட்டியிட தான் விருப்பமனுவே அளிக்கவில்லை என அத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் கூறியுள்ளார். நயினாருக்காகவே சாத்தூர் தொகுதியை தனக்கு அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர், சசிகலா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து அமமுக சென்று மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானவர் ராஜவர்மன்.
News April 4, 2026
BREAKING: தங்கம் விலை கிராமுக்கு ₹100 உயர்வு!

சென்னையில், தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் இன்று(ஏப்.4) 1 கிராம் ₹13,950-க்கும், சவரன் ₹1,11,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இந்த வாரம் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டதன் எதிரொலியே நம்மூரில் கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.


