News January 14, 2026

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

image

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரானை விட்டு இந்தியர்கள் விரைவாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாஸ்போர்ட், குடியேற்ற ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும், எந்தவித உதவியாக இருந்தாலும் உடனடியாக தூதரகத்தை அணுகுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. +989128109115, +98912810912 உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 30, 2026

சற்றுமுன்: விஜய்க்கு கடும் எச்சரிக்கை

image

அதிமுகவை விஜய் விமர்சிப்பாரேயானால் நிச்சயமாக நாங்கள் சும்மா விட மாட்டோம் என பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரித்துள்ளார். விஜய் தங்களை தொட்டு பார்த்திருக்க கூடாது என்ற அவர், மீண்டும் சீண்டினால் அவர் கடந்து வந்த பாதையின் முழு விவரங்களை சொல்வோம், அதை அவர்களால் தாங்கமுடியாது என்றார். அதிமுகவை விஜய் நேரடியாக அட்டாக் செய்ததால், EPS உள்பட அதிமுகவினர் கடுமையாக விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.

News January 30, 2026

கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

image

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News January 30, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $104.27 (இந்திய மதிப்பில் ₹9,578) உயர்ந்து $5,412.23-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $3.88 அதிகரித்து $117.3 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.

error: Content is protected !!