News January 17, 2026
ஈரானில் இருந்து திரும்பும் இந்தியர்கள்

உள்நாட்டு எதிர்ப்புகள் மற்றும் அமெரிக்காவுடனான போர் அச்சுறுத்தல் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் அங்கிருந்து திரும்பி வருகின்றனர். பதட்டமான சூழ்நிலை காரணமாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஈரானில் 9,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் எனவும், தற்போது ஈரானை விட்டு வெளியேறுவது நல்லது எனவும் இந்திய தூதரகம் பரிந்துரைத்தது.
Similar News
News February 11, 2026
காதலுக்காக ₹2,500 கோடியை உதறிய பெண்!

Practical ஆக மாறிவிட்ட இன்றைய ஜெனரேஷனை ஏஞ்சலின் பிரான்சிஸின் கதை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மலேசியாவில் கிட்டத்தட்ட ₹2,500 கோடிக்கு இளவரசியாக பிறந்தவர், எளிய பின்புலத்தை சேர்ந்த ஜெடியாவை காதலித்துள்ளார். சொத்தா? காதலா? என்ற கேள்வியை தந்தை ஏஞ்சலின் முன் வைக்க, காதலரை ஏஞ்சலின் கரம் பிடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஜெடியாவை திருமணம் செய்த ஏஞ்சலின், இன்றும் காதலில் திளைத்து வாழ்ந்து வருகிறார்.
News February 11, 2026
பள்ளி மாணவர்கள் 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, உ.பி.,யில் பள்ளி மாணவர்களுக்கு Albendazole மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால் சுமார் 120 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட, சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்களுக்கு இம்மாத்திரை அளிக்கப்படும் சூழலில், மாத்திரையால் பிரச்னை இல்லை எனவும் வேறு காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.
News February 11, 2026
LIC பாலிசி எடுத்திருக்கீங்களா.. இத கவனியுங்க

LIC பாலிசிதாரர்கள் தங்களின் பிரீமியத்தை எளிதில் WhatsApp மூலமே செலுத்தலாம் தெரியுமா? உங்களின் பாலிசியோடு இணைக்கப்பட்டுள்ள WhatsApp எண்ணில் இருந்து ‘89768 62090’ என்ற நம்பருக்கு ‘Hi’ என மெசேஜ் செய்யுங்க. என்ன சேவை வேண்டும் என ஆப்ஷன்கள் அடங்கிய மெசேஜ் வரும். அதில், ‘Premium due’ என்பதை தேர்வு செய்து, UPI மூலம் எளிதில் பணம் செலுத்தலாம். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


