News March 31, 2026
ஈரானின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்

ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கும் மசோதாவுக்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஈரான் மீது பொருளாதார நெருக்கடி விதிக்கும் USA, இஸ்ரேல் & பிற நாடுகளின் கப்பல்களுக்கு இவ்வழியாக செல்ல தடையும் விதிக்கப்படுமாம். இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸில் சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய், LPG-ன் விலை உயரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 7, 2026
வெள்ளி விலை இன்று ₹5,000 குறைந்தது

<<19587403>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் வெள்ளி நகைகளுக்கான விலை கிராமுக்கு ₹5 குறைந்து ₹255-க்கும், மொத்த விற்பனையில் கிலோவுக்கு ₹5,000 குறைந்து ₹2,55,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் நிலையாக ₹2.55 லட்சத்திற்கு விற்பனையான வெள்ளி நேற்று முதல் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
News April 7, 2026
மேற்குவங்கத்தில் வெற்றி யாருக்கு? புதிய கருத்துக்கணிப்பு

மேற்குவங்க தேர்தலுக்காக Matrize நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஆளுங்கட்சியான TMC 140-160 தொகுதிகளில் வெல்லும் எனவும் பாஜக 130-150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. TMC-ஐ (43%) விட பாஜகவுக்கான (41%) வாக்கு சதவீதம் 2 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளதால் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவும் என தெரியவந்துள்ளது.
News April 7, 2026
பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்ட விவரங்களில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


