News August 20, 2024
ஈரப்பதத்தை 22%-ஆக உயர்த்த வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மூலம் கொள்முதல் செய்யும் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு ஈரப்பதம் சதவீதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 12, 2025
திருவாரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு/பட்டய படிப்பு படித்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் நல மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு https//www.tngrisnet.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 12, 2025
திருவாரூர்: பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த மாங்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு, இவர் கடத்தி வந்த 22 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
வலங்கைமான் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் மேலவிடயல் ஊராட்சி கும்ப சமுத்திரம் கலைஞர் நகரில் கட்டப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வ.மோகனசந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர் உடனிருந்தனர்.