News April 8, 2025
ஈசன் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் முறப்பநாடு திருத்தலம்

முறப்பநாடு கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. நவகயிலாயத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக சிவபெருமான் குருபகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இங்கு மட்டுமே உண்டு.புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால் தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
Similar News
News April 16, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
News April 16, 2025
தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
News April 16, 2025
தூத்துக்குடி மாவட்டத்தின் இராணுவ கிராமம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி கிராமத்தினை ராணுவ கிராமம் என்று கூறுகின்றனர். வீட்டுக்கு ஒருவர் இங்கு இராணுவத்தில் பணிபுரிகிறார்கள், சுமார் 3500 பேர் ராணுவம், துணை ராணுவம், காவல் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர். ராணுவத்தில் சேருவதற்காக இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க