News April 7, 2025

இ-பாஸ் பதிவு செய்யவதில் பிரச்னை; சுற்றுலா பயணிகள் அவதி

image

நேற்று வார விடுமுறை என்பதால், கேரளாவில் இருந்து, கூடலுார் நாடுகாணி வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர். இந்நிலையில், சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக, இ–பாஸ் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். இதனால், இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டது.

Similar News

News November 1, 2025

நீலகிரி: லஞ்சம் கேட்டால்.. CALL பண்ணுங்க

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது.எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசினார். நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News November 1, 2025

நீலகிரி: தோட்டப் பயிர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்!

image

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தோட்ட பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எலுமிச்சை, ரம்புட்டான், ஆரஞ்சு, அவகோடா போன்ற மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றவும், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் கேரட்,பீட்ரூட், உருளை, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளுக்கு தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.93,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!