News May 2, 2024
இ-பாஸ் நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு

மே. 7 ஆம் தேதி முதல் ஜீன். 30 ஆம் தேதி வரை கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் வேண்டும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் அளிக்க தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.
Similar News
News August 25, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னஸ் தொடங்க மானியம்!

திண்டுக்கல் மக்களே ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 25, 2025
திண்டுக்கல்: வாலிபர் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: வத்தலகுண்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ்(22). த.மு.மு.க நிர்வாகியான இவர் தனது நண்பருடன் பைக்கில் பழைய வத்தலகுண்டுவிற்குச் சென்றுள்ளார். திரும்பி வரும் போது தேனி நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 25, 2025
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11 மணி முதல் நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை முன்னெடுக்கிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.