News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.

Similar News

News September 16, 2025

தி.மலை: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 554 மனுக்கள்!

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

News September 16, 2025

தி.மலை: சொகுசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து!

image

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் இன்று (செப்.,16) தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 16, 2025

தி.மலை: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!