News April 25, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 25, 2025
வேலூர் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குடியாத்தம்- 04171 229100 , வேலூர்- 0416 2221204. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
News April 25, 2025
காட்பாடி ரயிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையம் வந்தது. காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ரயில் பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் 15 பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News April 24, 2025
வேலூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் மே 2-ந் தேதி காட்பாடி விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது. 16 முதல் 25 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலாளர் கட்டாயம் தேவை. வயது சான்றிதழும், கல்வி நிறுவன சான்றிதழும் தேவை. போட்டி போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.