News March 24, 2025
இஸ்லாமிய அறங்காவலர் என வதந்தி பரப்பியவர் கைது

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர் நியமிக்கப்பட்டது. அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்ற தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில் ராஜபாளையத்தைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவண கார்த்தி (43) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News August 23, 2025
கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
News August 23, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
தஞ்சாவூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

தஞ்சை மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <