News September 24, 2025
இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்வில், “தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பட்டதாரிகளாக தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், உலகத்திற்கானவர்களாக தமிழ்நாடு கல்வியின் மூலம் உருவாக்கிக் கொண்டு வருகிறது.” என பேசினார்.
Similar News
News September 24, 2025
திருச்சி: மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்

மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி பஸ் டிப்போ அருகே இன்று 60 வயது மதிக்கத்தக்க மர்மமான முறையில் ஆண் சடலம் கிடந்தது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 24, 2025
மூன்று பேர் உயிரிழப்பு சம்பவம்; லாரி டிரைவருக்கு 30 ஆண்டு சிறை

திருப்பராய்த்துறை பகுதியைச் சேர்ந்த அரவிந்த், சுசீலா, சரவணன் ஆகியோர் ஆட்டோவில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த போது, டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது, விசாரணை நிறைவுபெற்று டிப்பர் லாரி டிரைவர் வெள்ளிராஜாவுக்கு 30 ஆண்டு சிறை தண்டணை விதித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
News September 23, 2025
மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி மெமு ரயிலானது வரும் 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில், மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்குறிப்பிட்ட செய்திகளில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.