News January 8, 2025
இஸ்ரோ தலைவருக்கு ஈபிஎஸ் வாழ்த்து!

“இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன், விண்வெளி அறிவியல் துறையின் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது நம் மாநிலத்திற்கு பெருமை. தங்கள் தலைமையில், இந்திய நாடு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Similar News
News February 15, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News February 15, 2026
சேலம்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News February 15, 2026
வட மாநில தொழிலாளி சடலம் ராஜஸ்தான் அனுப்பி வைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை த.வெ.க. கூட்டத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளி சுராஜின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடினர். த.வெ.க. தரப்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு, குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்பதாக உறுதியளித்ததை அடுத்து, உறவினர்கள் சடலத்தைப் பெற்றுக்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


