News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News January 29, 2026
தி.மலை: பிரபலங்கள் மீது வழக்கு!

தி.மலை அண்ணாமலையார் மலை மீது ஏற வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையை மீறி உச்சிக்குச் சென்று வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
News January 29, 2026
தி.மலை: வீடு புகுந்து துணிகர செயல்!

செய்யாறு அருகே பைங்கினர் பகுதியில், ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடப்பட்டது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், இது தொடர்பாக விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை பவுன் நகை மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
News January 29, 2026
தி.மலை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி இன்ஸ்டன்ட் லோன் செயலிகளால் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகமான ஆப்களை பதிவிறக்கம் செய்வதையும், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 எண்ணிலோ அல்லது இந்த லிங்கின் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.


