News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு திருப்பதி கோயில் பற்றி தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் “தென்திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 420 அடி உயரத்தில் உள்ளது. திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
News November 24, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
செங்கல்பட்டு: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை இங்கே <


