News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

Similar News

News September 14, 2025

கிருஷ்ணகிரி: இன்று முதல்வர் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.14) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவில் 85,711 பயனாளிகளுக்கு முதல்வர் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் பட்டா அளிப்பது இதுவே முதல்முறை என தெரிவித்தார்.

News September 14, 2025

கிருஷ்ணகிரி: பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்காக, ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்தப் பத்திரம் மற்றும் ரூ.600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கடைகள், கல் அல்லது தார்சுக் கட்டடங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

News September 14, 2025

கிருஷ்ணகிரி: ஷேர் மார்க்கெட் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரண்டு மடங்கு லாபம் என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. நமது நம்பிக்கையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் மோசடி முயற்சிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மோசடிகளில் ஏமாந்திருந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.

error: Content is protected !!