News March 23, 2026
இஸ்ரோவில் பள்ளி மாணவர்கள் விண்ணபிக்க கடைசி தேதி

இளம்விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள் <
Similar News
News April 8, 2026
விசிலடிப்பவர்கள் பேரவைக்கு வேண்டாம்: திருமா

சமூகநீதிக்கு எதிரான சங்பரிவார் கும்பல் தமிழகத்துக்கு வேண்டாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். கடலூர் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், இது உ.பியோ, ம.பியோ அல்ல; பெரியார் மண் என தெரிவித்தார். மேலும், விசிலடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள், பேரவைக்கு அனுப்ப வேண்டாம் என்று தவெகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
News April 8, 2026
BIG NEWS: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $160(3.44%) உயர்ந்து $4,817-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $4(5%) உயர்ந்து $77-க்கு விற்பனையாகிறது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை 2 வாரங்களுக்கு நிறுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
News April 8, 2026
அண்ணாமலைக்கு முக்கிய பதவி?

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம், தேர்தல் முடியும் வரை தமிழக பாஜகவை அமைப்பு ரீதியாக வழிநடத்த குழு அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


