News March 21, 2026

இவர் இன்னொரு துரந்தர்

image

நாட்டிற்காக உயிர்நீத்த வீரத் திருமகன்களில் மேஜர் மோகித் சர்மாவும் ஒருவர். 1999-ல் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் பணி செய்த அவர், 2004-ல் இந்திய ராணுவத்தின் பிணைக் கைதி போல் நடித்து ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்குள் ஊடுருவி தீவிரவாதிகளை கொல்ல உதவினார். 2009-ல், 4 பயங்கரவாதிகளை கொன்ற அவர் படுகாயங்களால் வீரமரணமடைந்தார். இவரது வீரத்தையும், தியாகத்தையும் கெளரவித்து அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

Similar News

News April 6, 2026

BREAKING: ஜாபர் சாதிக் வீட்டில் IT ரெய்டு!

image

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக EX நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் IT, தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள அவரது விடுதி, பட்டினப்பாக்கத்தில் உள்ள வீடுகளில் நடத்தப்படும் இந்த சோதனையால் பரபரப்பு தொற்றியுள்ளது. தேர்தலுக்கான பணப்பட்டுவாடா சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 6, 2026

அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறிய அரசியல்: சீமான்

image

திமுக, அதிமுக என எந்த ஆட்சி வந்தாலும் டாஸ்மாக் இருக்கும் என கூறிய சீமான் ‘கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக’ என சாடியுள்ளார். கடலூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் அதிகரித்துள்ள ஊழல், லஞ்சத்தை துடைத்தெறிய நாதக-வுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார். அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு புனிதமான பணி. ஆனால், தற்போது லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

News April 6, 2026

கென் கருணாஸின் அடுத்த படம் இவருடனா?

image

முதல் படத்திலேயே (யூத்) நல்ல வரவேற்பை பெற்ற கென் கருணாஸுக்கு பட வாய்ப்புகள் குவிகிறதாம். ஆனால், படம் என்றாலே நான் இயக்கினால்தான் நான் நடிப்பேன் என அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தயாரிப்பாளர் தாணுவுக்குதான் தன்னுடைய அடுத்த படத்தை கென் இயக்கப்போகிறார் என தகவல் கசிந்துள்ளது. எனவே, விரைவில் தாணு தயாரிப்பில் கென் இயக்கி, நடித்த படம் வெளியாகலாம் என்கின்றனர்.

error: Content is protected !!