News December 24, 2025

இவர் இன்னொரு ‘துரந்தர்’

image

துரந்தர் வெற்றியால் இந்திய உளவாளிகள் பற்றிய வரலாற்றை பலரும் அலசுகின்றனர். அதில் ரவீந்தர கெளஷிக் முக்கியமானவர். நடிப்பில் தேர்ந்த இவரை RAW அமைப்பு பயிற்சியளித்து PAK-க்கு அனுப்பியது. பாக்., ஆர்மியில் சேர்ந்த இவர் 1980-ல் முக்கிய தகவலளித்து 20,000 IND வீரர்களை காப்பாற்ற உதவினார். இறுதியாக சிக்கியதில், 16 வருட சிறைவாசம் அனுபவித்து இறந்தார். Black Tiger என கெளரவிக்கப்பட்ட ரவீந்தருக்கு ராயல் சல்யூட்!

Similar News

News December 25, 2025

தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

1979-க்கு பிறகு ஒரே ஆண்டில் தங்கம் விலை 70% உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டும் தொடரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் (28g) தங்கம் விலை $4,493.76 ஆக இருக்கும் நிலையில், 2026 முடிவில் இது $5,000 ஆக மாறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சர்வதேச அரசியல், பொருளாதார சூழல்களை பொறுத்து இது மாறும்.

News December 25, 2025

சற்றுமுன்: இரவில் விஜய்க்கு பேரதிர்ச்சி

image

திருவள்ளூர் தவெக நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில், தவெக பூண்டி ஒன்றிய செயலாளரின் போட்டோ இடம்பெறாததால், சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. முன்னதாக, <<18669220>>அஜிதா ஆக்னஸ்<<>> ஹாஸ்பிடலில் அனுமதிக்கபட்ட நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகளின் சோக நிகழ்வுகளால் விஜய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

News December 25, 2025

WPL: நாளை மாலை 6 மணிக்கு டிக்கெட்

image

WPL 2026 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மாலை 6 மணி முதல் கிடைக்கும். லீக் போட்டிகள், ஜனவரி 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் RCB மற்றும் MI அணிகள் மோதுகின்றன. இந்த சீசனின் போட்டிகள், நவி மும்பை மற்றும் வதோதரா மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 5 அணிகள், 22 போட்டிகள். இறுதிப் போட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். இணையதளம்: https://www.wplt20.com/

error: Content is protected !!