News March 19, 2026

இவர்கள் வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்

image

85 வயதுக்கு மேற்பட்டோர், 40%க்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் & வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவோர் <<19426015>>தபால் வாக்களிக்கலாம்<<>>. தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் படிவம் 12D-ஐ பூர்த்தி செய்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், அதிகாரிகள் வாக்காளரின் வீட்டிற்கு சென்று தபால் வாக்கை பதிவு செய்து கொள்வார்கள். SHARE IT.

Similar News

News March 30, 2026

இனி மாதம் ₹2,500.. ஸ்டாலின் புதிய அறிவிப்பு

image

TN-ல் ஆதரவற்ற முதியோர்களுக்கு, அரசு மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை உயர்த்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது ₹1,200-ஆக இருக்கும் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு, வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையையும் ₹2,500-ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

பெண்ணை காலில் மிதித்தபடி நிற்கும் அனுமன் கோயில்!

image

கையில் கதாயுதத்துடன் பெரும்பாலான கோயில்களில் சாந்த ஸ்வரூபியாக காட்சி தரும் அனுமன், ‘கஷ்டபஞ்சன் அனுமன்’ கோயிலில் மட்டும் பெண்ணை காலால் மிதிப்பது போன்ற தோற்றத்தில் உக்கிரமாக காட்சி தருகிறார். குஜராத்தின் போடாட் மாவட்டத்திலுள்ள இக்கோயிலில் அவர் மிதித்துக் கொண்டிருப்பது, சனி பகவானின் பெண் வடிவம் என கூறப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால், நிவர்த்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

News March 30, 2026

பிரசாரத்தில் அஜித் போட்டோவுடன் EPS

image

கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து EPS தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள், EPS-அஜித் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோவை அவருக்கு பரிசளித்தனர். அதை EPS மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியில் உயர்த்தியும் காண்பித்தார். அதில், ‘Never Ever Give Up’ என்ற அஜித் பட வசனமும் இடம்பெற்றிருந்தது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!